Monday 2 August, 2010

மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு-- என் கருத்துகள்

பதிவர் ப்ருனோ அவர்கள் எழுதிய

மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு

மற்றும் பதிவர் விந்தைமனிதன் அவர்களின்

மாற்றுமருத்துவம் ஏமாற்றுவேலையா? - Dr.புரூனோவின் பதிவையொட்டி சில சிந்தனைகள்

இரு பதிவுகளிலும் விவாதங்கள் நடைபெற்றது.. மேலும் பின்னூட்டங்களில் என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து சொன்னாலும் நடந்த விவாதங்களை பற்றிய என்னுடைய எண்ணங்கள் இங்கே..

போலி மருத்துவர்களை ஒழிக்கும் முகமாக தமிழகமெங்கும் raid நடத்தப்பட்டது.. அதன்படி முறையாக மருத்துவம் பயிலாமல் மருத்துவம் பார்த்தவர்களும் ,மாற்று மருத்துவம் படித்துவிட்டு தாங்கள் படித்த முறையில் மருத்துவம் பார்க்காமல் அலோபதி முறையில் மருத்துவம் பார்த்தவர்களும் கைது செய்யப்பட்டனர்..இந்த நடவடிக்கையில் முழுக்க மாற்று மருத்துவத்தில் மருத்துவம் பார்க்கும் எந்த மருத்துவரும் பாதிக்கபடவில்லை.

அப்படி இருக்கையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில்தான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது..

நன்றி : தி இந்து : http://www.thehindu.com/news/cities/Chennai/article542577.ece

ஆகவே இங்கு சில கேள்விகள் எழுகின்றன..


  • அலோபதி மருத்துவத்தை பற்றி தெரியாமலேயே அலோபதி மருத்துவத்தை மாற்று மருத்துவர்கள் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகாதா?
  • கிராமங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதனை காரணம் காட்டி BSMS ,BAMS அல்லாத மருத்துவம் பயிலாத RIMP போன்ற போலி மருத்துவர்களும்  சட்டபூர்வமாக அலோபதி மருத்துவம் செய்ய இது வாய்ப்பாகாதா ?
  • இதனால் மக்களுக்கு நன்மையா .. தீமையா?..
மாற்று மருத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை.. ஆனால் தாங்கள் படித்த மருத்துவத்தின்மீது   நம்பிக்கை இல்லாமல் வேறொரு மருத்துவத்தை செய்ய சட்டபூர்வ அங்கீகாரம் கேட்பது ஏன் என்பதுதான் இங்கு கேள்வி..

இதனை பற்றிய கேள்வி எழுப்புகையில் மேற்கண்ட இரண்டு பதிவிலும்  அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது..

ஆனால் இதனால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை..

ஆக்கபூர்வமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன..

14 comments:

Bruno said...

//இதனை பற்றிய கேள்வி எழுப்புகையில் மேற்கண்ட இரண்டு பதிவிலும் அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது..//

வருத்தப்படவேண்டிய விஷயம்

//ஆனால் இதனால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை..//

ஏன் !!

கிருஷ்ண மூர்த்தி S said...

/அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது/

மிகத் தவறான அணுகுமுறை! எந்த அலோபதி வைத்தியருடனும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு இருக்க சந்தர்ப்பமே இல்லை. ஆனாலும், மறுத்துக் கருத்துக்கள் வருகிறதென்றால், அதற்கு மருத்துவர் ப்ருனோ, தன்னுடைய பின்னூட்டங்களில் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் மாதிரி ஒருதலைப் பட்சமாகவே அல்லது திசைமாறி எழுதிய ஒன்று தான் காரணம்.

அலோபதி மருத்துவத்தின் மிகப் பெரிய பலவீனம் எது என்றால், அது மருத்துவனை, மருத்துவ முறையை மையம் கொள்ளாமல், கொள்ளை லாபம் சம்பாதிக்கப் புறப்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிடியில் சிக்கி இருப்பது தான்.

இந்தப் போக்குக்கு எதிராக, அலோபதி மருத்துவர்களே, ஆராய்ச்சியாளர்களே போர்க்கொடி தூக்கி வரும் செய்திகளை, ப்ருனோவின் இரண்டு பதிவுகளிலும் சுட்டி கொடுத்துப் பின்னூட்டம் எழுதியிருக்கிறேன்.

முதலில் தினத்தந்தி ரகத்தில் தலைப்புக் கொடுத்திருக்கும் இந்தப்பதிவுக்கு எனது கருத்தாக,

ஒன்று, எந்த நீதிமன்றமும், வழக்கில் உள்ள எந்த முறைக்கும் சாவுமணி அடித்து விட முடியாது. தலைப்பே அதீதக் கற்பனை.

அடுத்து, போலி மருத்துவம் என்ற வார்த்தை. அதன் மேல் நடத்திய ரைடு என்பதும், மிகைப் படுத்தப்பட்ட ஒன்று. இதே கேள்விய்சைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுக் கேட்கலாமா?

சில மாதங்களுக்கு முன்னாள், போலி மருந்து விவகாரத்தில், சில கைதுகள் தமிழகத்தில் நடந்தன. காலாவதியாகிப் போன மருந்துகளை, சென்னையில் உள்ள சில மருத்துவர்களே விநியோகம் செய்த செய்தியும் வந்தது. மத்திய அரசின் சுகாதாரத்துறை மருத்துவ மனைகளில், ஆந்திராவில், கர்நாடகத்தில் சிபிஐ நடத்திய சோதனைகளில், கலப்படம் செய்யப்பட்ட, தரக்குறைவான,காலாவதியாகிப்போன மருந்துகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதும் செய்தியாக வந்தது.

இப்போது குதிக்கும் எந்த அலோபதி ஆதரவாளரும், விழிப்போடு குரல் கொடுத்ததாகவோ, போலிகள் ஜாக்கிரதை என்று தங்களுக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து கொண்டதாகவோ தெரியவில்லை.

இதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது, எங்களுக்கு சம்பந்தமே இல்லை என்று அலோபதி மருத்துவர்கள் சொல்வதை ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொண்டாலுமே, இதைப் பற்றிய முழுமையான ஞானமோ,தேர்ச்சியோ அலோபதி மருத்துவர்களுக்கே இல்லை என்று தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

மருந்துக் கம்பனிகள் பிரபலமானவை என்றால், ஆராய்ச்சி, தயாரிப்புத் தரம் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே மருத்துவர்கள் அவற்றைப் பரிந்துரை செய்கிறார்கள். போதாக்குறைக்கு, மருந்து நிறுவனங்கள் அளிக்கும் அன்பளிப்புக்கள், அவர்களை அதைத் தாண்டிப் போக விடுவதில்லை.

மூன்றாவதாக, முக்கியமானதும் கூட-மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள்,ஒரு தயாரிப்பை ஒரு காலம் வரை சந்தையில் வைத்திருந்து, புதிய ஆராய்ச்சி, புதிய தயாரிப்பு என்று அறிமுகப்படுத்தும்போதே, பழைய மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அல்லது பீதியைக் கிளப்புகிற விதத்திலேயே சந்தைப் படுத்திக் கொண்டிருப்பதும் கொஞ்சம்விவர அறிந்த எவருக்கும் தெரிந்த விஷயம்.

மாற்று மருத்துவத்தை அழித்து விடும் இந்தத் தீர்ப்பு என்று ப்ருனோ தன்னுடைய பதிவில் பின்னூட்டங்களில் மாறி மாறிப் பேசுகிறார். அது தனி விஷயம்.

அலோபதி மருத்துவம், முதலில் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு பேசட்டும் என்று சொல்ல வைக்கிற அளவுக்கு நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டு பதிவுகளில் நடந்த விவாதம் இருக்கிறது.

மேல்விவரங்கள் என்னுடைய தளத்தில் குறைந்தது ஆறு பதிவுகளில் இருக்கின்றன.

http://consenttobenothing.blogspot.com

மருந்தா எமனா என்ற குறியீட்டுச் சொல்லில் தேடிப்பாருங்கள்!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Dr.ராம் said...

//மிகத் தவறான அணுகுமுறை! எந்த அலோபதி வைத்தியருடனும் பின்னூட்டம் எழுதியவர்களுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு இருக்க சந்தர்ப்பமே இல்லை. //

நீங்கள் தொடர்ந்து தமிழ் பதிவுகளை வசிப்பவராக இருந்தால் ஒன்றை நன்றாக கவனிக்கலாம் .. எங்கு அலோபதி மருத்துவர்களை பற்றிய விவாதங்கள் எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதலை முன்னிறுத்தியே பின்னூட்டங்கள் இடப்படுகிறது ..
இது காழ்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன..

மேலும் இங்கு விவாதத்தில் ஈடுபடும் எந்த மருத்துவரும் எதிர்கருத்தை சொல்பவரிடம் தனிப்பட்ட தாக்குதலில் இறங்குவதில்லை..

ஆனால் மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட இடுகைகள் அனைத்திலும் தொடர்ச்சியாக சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நியாயமான விஷயங்களை சொன்னாலும் எதிர்க்கின்றனர் .. இந்த பதிவிலும் அப்படித்தானே..

அதாவது மாற்று மருத்துவர்கள் அவர்களது மருத்துவத்தை practice செய்யலாம்..ஆனால் ஏன் அலோபதி மருத்துவம் செய்ய அனுமதி கேட்டு வழக்கு தொடுக்கிறார்கள் என்பதுதான் கேள்வி..

இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் இங்கு பெரும்பாலான பின்னூட்டங்கள் அலோபதி மருத்துவர்களை பற்றியும் அதில் உள்ள குறைபாடுகளையும் மட்டுமே திரும்ப திரும்ப சொல்வதை தங்கள் கவனிக்கலாம். இதற்கு என்ன காரணம்..

Dr.ராம் said...

//அலோபதி மருத்துவத்தின் மிகப் பெரிய பலவீனம் எது என்றால், அது மருத்துவனை, மருத்துவ முறையை மையம் கொள்ளாமல், கொள்ளை லாபம் சம்பாதிக்கப் புறப்படும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பிடியில் சிக்கி இருப்பது தான்.//

இதனை வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் அந்த பலவீனத்தில் சிக்க அதாவது அலோபதி மருத்துவத்தை செய்ய அனுமதி கேட்டு ஏன் மாற்று முறை மருத்துவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதுதான் இங்கு விஷயம்

Dr.ராம் said...

//அடுத்து, போலி மருத்துவம் என்ற வார்த்தை. அதன் மேல் நடத்திய ரைடு என்பதும், மிகைப் படுத்தப்பட்ட ஒன்று. இதே கேள்விய்சைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுக் கேட்கலாமா? //

அதன் தொடர்ச்சியாகத்தான் எங்களையும் அலோபதி மருத்துவம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாற்று முறை மருத்துவர்களின் ஒரு சங்கம் இந்த வழக்கையே தொடர்ந்தது..

//சில மாதங்களுக்கு முன்னாள், போலி மருந்து விவகாரத்தில், சில கைதுகள் தமிழகத்தில் நடந்தன. காலாவதியாகிப் போன மருந்துகளை, சென்னையில் உள்ள சில மருத்துவர்களே விநியோகம் செய்த செய்தியும் வந்தது//

மன்னிக்கவும்.. எந்த ஒரு அலோபதி மருந்துபட்டையிலும் உற்பத்தி செய்யப்பட தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் .இந்த போலி மருந்து விவகாரத்தில் மருத்துவரல்லாத ஒரு நபர் தனது சுய லாபத்துக்காக காலாவதியான மருந்துகளை அழிப்பதாக மருந்து கம்பெனிகளிடமிருந்து ஒப்பந்தம் எடுத்து ,காலாவதி ஆகும் தேதியை போலியாக அச்சடித்து அதன் உறைகளையும்(label ) மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.. தங்கள் சொன்னபடி காலாவதி மருந்து என்று தெரிந்து எந்த அலோபதி மருத்துவரும் பரிந்துரைக்கவில்லை..இங்கு பொதுமக்களுடன் சேர்ந்து மருத்துவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.. தாங்கள் கூறியது போல் அல்ல.. பழைய செய்திகளை நன்கு படித்து பார்க்கவும்..

மேலும் தற்போதைய தீர்ப்பின்படி அனைவரும் அலோபதி மருந்தை பரிந்துரைக்க ஆரம்பித்தால் இதுபோன்ற போலிகள் பெருகும் என்பதுதான் உண்மை நிலை..இதற்கு உங்கள் பதில் என்ன

//இப்போது குதிக்கும் எந்த அலோபதி ஆதரவாளரும், விழிப்போடு குரல் கொடுத்ததாகவோ, போலிகள் ஜாக்கிரதை என்று தங்களுக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து கொண்டதாகவோ தெரியவில்லை. //

சுய பரிசோதனை செய்ததாலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..உதாரணமாக போலி சான்றிதழ்கள் கொடுத்து மாணவர்கள் கல்லூரியில் சேர முயன்ற விவகாரம் தற்போது வந்துள்ளது .. இதே போன்ற மோசடிகள் கடந்த வருடங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.. அதனால் போலி சான்றிதழ்கள் விவகாரம் அனைத்து துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிந்துதான் நடந்தது என்று கூற முடியுமா.. இதைப் பற்றிய முழுமையான ஞானமோ,தேர்ச்சியோ துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் இல்லை என்று தான் முடிவு செய்ய முடியுமா?

Dr.ராம் said...

//அடுத்து, போலி மருத்துவம் என்ற வார்த்தை. அதன் மேல் நடத்திய ரைடு என்பதும், மிகைப் படுத்தப்பட்ட ஒன்று. இதே கேள்விய்சைக் கொஞ்சம் திருப்பிப் போட்டுக் கேட்கலாமா? //

அதன் தொடர்ச்சியாகத்தான் எங்களையும் அலோபதி மருத்துவம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாற்று முறை மருத்துவர்களின் ஒரு சங்கம் இந்த வழக்கையே தொடர்ந்தது..

//சில மாதங்களுக்கு முன்னாள், போலி மருந்து விவகாரத்தில், சில கைதுகள் தமிழகத்தில் நடந்தன. காலாவதியாகிப் போன மருந்துகளை, சென்னையில் உள்ள சில மருத்துவர்களே விநியோகம் செய்த செய்தியும் வந்தது//

மன்னிக்கவும்.. எந்த ஒரு அலோபதி மருந்துபட்டையிலும் உற்பத்தி செய்யப்பட தேதி மற்றும் காலாவதி ஆகும் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் என்பது தங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் .இந்த போலி மருந்து விவகாரத்தில் மருத்துவரல்லாத ஒரு நபர் தனது சுய லாபத்துக்காக காலாவதியான மருந்துகளை அழிப்பதாக மருந்து கம்பெனிகளிடமிருந்து ஒப்பந்தம் எடுத்து ,காலாவதி ஆகும் தேதியை போலியாக அச்சடித்து அதன் உறைகளையும்(label ) மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.. தங்கள் சொன்னபடி காலாவதி மருந்து என்று தெரிந்து எந்த அலோபதி மருத்துவரும் பரிந்துரைக்கவில்லை..இங்கு பொதுமக்களுடன் சேர்ந்து மருத்துவர்களும் ஏமாற்றப்பட்டுள்ளோம்.. தாங்கள் கூறியது போல் அல்ல.. பழைய செய்திகளை நன்கு படித்து பார்க்கவும்..

மேலும் தற்போதைய தீர்ப்பின்படி அனைவரும் அலோபதி மருந்தை பரிந்துரைக்க ஆரம்பித்தால் இதுபோன்ற போலிகள் பெருகும் என்பதுதான் உண்மை நிலை..இதற்கு உங்கள் பதில் என்ன

//இப்போது குதிக்கும் எந்த அலோபதி ஆதரவாளரும், விழிப்போடு குரல் கொடுத்ததாகவோ, போலிகள் ஜாக்கிரதை என்று தங்களுக்குள்ளேயே சுயபரிசோதனை செய்து கொண்டதாகவோ தெரியவில்லை. //

சுய பரிசோதனை செய்ததாலேயே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது..உதாரணமாக போலி சான்றிதழ்கள் கொடுத்து மாணவர்கள் கல்லூரியில் சேர முயன்ற விவகாரம் தற்போது வந்துள்ளது .. இதே போன்ற மோசடிகள் கடந்த வருடங்களிலும் நடந்ததாக கூறப்படுகிறது.. அதனால் போலி சான்றிதழ்கள் விவகாரம் அனைத்து துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் தெரிந்துதான் நடந்தது என்று கூற முடியுமா.. இதைப் பற்றிய முழுமையான ஞானமோ,தேர்ச்சியோ துணைவேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் இல்லை என்று தான் முடிவு செய்ய முடியுமா?

கிருஷ்ண மூர்த்தி S said...

டாக்டர் ராம்!

விவாதத்தின் நடுப்பகுதியில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் இவை.

என்னுடைய தளத்தில் சென்ற திங்களன்றும், புதனன்றும் மாற்று மருத்துவம், மாற்றுச் சிந்தனை குறித்து இரண்டு பதிவுகளை எழுதினேன். மருத்துவர் ப்ருனோ அங்கே பின்னூட்டங்களில் நிறையக் கேள்விகளை எழுப்பினார். ஹிந்துவில் வெளிவந்த தீர்ப்பைக் கூட அங்கே சுட்டியிருந்தார்.

அவருடைய பதிவில் தனிப்பதிவாகவும் எழுதினார். ஏற்கெனெவே நடந்த விவாதங்களைத் தொடர்ந்து என்னுடைய பின்னூட்டங்களை அங்கே எழுதினேன்.

எந்த முறை சிறந்த முறை என்ற பட்டி மன்றமாகவோ, அல்லது எதோ ஒர்ன்றுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற வகையில் என்னுடைய பதிவோ, பின்னூட்டங்களோ இல்லை.

நீங்கள் இப்போது, அலோபதி மருத்துவம் மீது காழ்ப்புணர்ச்சி என்று ஒரு முடிவை எடுத்துக் கொண்டு எழுதுவதுபோலக் கூட அல்ல!

நான் ஒரு வங்கியாளன், மருத்துவனில்லை! என்னுடைய கேள்விகள் எல்லாம், ஒரு ஆதாரத்தைக் கொடுத்தபிறகே எழுப்பப் பட்டவை. மரு.ப்ருனோ, அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு,அவருக்கு சௌகரியப்படுகிற வகையில் மட்டுமே என் கேள்விக்கென்ன பதில் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆக, இந்தப் பதிவு,பின்னூட்டங்கள் எல்லாமே, பட்டிமன்றங்கள் மாதிரி வெட்டி மன்றமாகிப் போனதைப் பார்த்து விட்டு,நான் ஒதுங்கினேன்.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் பிடியில்.. இதை ஒரு வாதத்திற்காகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்! ஆதாரத்தைச் சுட்டிய பிறகும் இப்படி எழுதும்போது, நீங்கள் கற்பித்துக் கொண்டிருக்கிற சுவர்க்கதிலேயே இருந்து கொள்ளுங்கள் என்பது தான் பதிலாக இருக்க முடியும், நீங்களும் அவரைப்போல என் கேள்விக்கென்ன பதில் என்று பாடுவதை நான் தடுக்கப் போவதில்லை.

Dr.ராம் said...

//அலோபதி மருத்துவம், முதலில் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு பேசட்டும் என்று சொல்ல வைக்கிற அளவுக்கு நீங்கள் மேற்கோள் காட்டிய இரண்டு பதிவுகளில் நடந்த விவாதம் இருக்கிறது.//

தங்களது வாதத்தின்படி ஒரு தூய்மை இல்லாத மருத்துவ முறையை செய்ய எங்களுக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் கொடுங்கள் என்று மாற்றுமுறை மருத்துவர்கள் ஏன் கேட்க வேண்டும் என்பதுதான் இங்கு விவாதத்திற்கு உட்படுகிறது.. தூய்மையான அவர்களது மருத்துவ முறையையே அவர்கள் செய்யலாமே...

கிருஷ்ண மூர்த்தி S said...

அனானி,

முகத்தை முட்டாக்குப் போட்டு மூடிக் கொண்டு அனானியாக வந்து கேட்டாலும் கூட....

மருந்தா எமனா என்பது குறியீட்டுச் சொல், tag word.அவ்வளவுதான்!

டாக்டர் ராம்!

அலோபதி முறையைப் பின்பற்ற விரும்பும் , வழக்குத் தொடுத்த ஒரு தரப்பு என்னைப் பொறுத்தவரை insignificant and irrelevant.

அந்த ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு மாற்று மருத்துவம் குறித்த எனது கருத்தை உருவாக்கிக் கொள்ளப் போவதில்லை.

அலோபதி முறையை பற்றி இவ்வளவு எழுதுவது காழ்ப்புணர்ச்சியால் இல்லை. ஒரு பயனாளியாக எனது அனுபவங்களோடு, பார்த்த, கேட்ட, படித்த விஷயங்களையும் சேர்த்து என்னுடைய கருத்தாக முன்வைக்கப் படுபவை.

இப்போது கூட மியாவ் மியாவ் என்று அழைக்கப்படும் NRG-1 மருந்தை ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் வரை சட்டபூர்வமான anti depressant மருந்தாக அங்கீகரித்திருந்த மருந்தை இப்போது தடைசெதிருப்பதைப் பற்றிய செய்திகளைப் பற்றிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

ப்ருனோ வழியில் சொல்வதானால், அலோபதி முறையில் மட்டுமே அதைக் கண்டுபிடித்துச் செய்ய முடிகிறது..சித்த ஆயுர்வேத, யுனானி முறையில் அப்படியிருக்கிறதா என்பது.

என்னுடைய அக்கறை எல்லாம், எப்படி அரசுகளும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் கைகோர்த்துக் கொண்டு இது மாதிரி மோசடிகளைச் செய்து கொண்டிருக்கின்றன என்பதில் தான்.எப்படி இவர்கள், உங்களை மாதிரி மருத்துவர்களைப் பயன்படுத்திக் கொண்டு, ஜனங்களை ஏமாந்த சோணகிரிகளாகவே எப்போதும் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் தான்!

Dr.ராம் said...

//இப்போது கூட மியாவ் மியாவ் என்று அழைக்கப்படும் NRG-1 மருந்தை ஒரு பத்து நாட்களுக்கு முன்னால் வரை சட்டபூர்வமான anti depressant மருந்தாக அங்கீகரித்திருந்த மருந்தை இப்போது தடைசெதிருப்பதைப் பற்றிய செய்திகளைப் பற்றிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

ப்ருனோ வழியில் சொல்வதானால், அலோபதி முறையில் மட்டுமே அதைக் கண்டுபிடித்துச் செய்ய முடிகிறது..சித்த ஆயுர்வேத, யுனானி முறையில் அப்படியிருக்கிறதா என்பது.//

நன்றி..புரிந்து கொண்டதற்கு..

vinthaimanithan said...

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்துக்கள்தான் எனது கருத்தும். மேலும் சில கேள்விகள்:

1) Dr.புருனோவின் பதிவில் அவர்கொடுத்த தலைப்பு 'மாற்றுமருத்துவமுறைகளுக்கு சாவுமணி அடிக்கும் உயர்நீதிமன்றத்தீர்ப்பு' என்பது.

அடுத்த வரியிலேயே இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்கிறார்.

ஆக மாற்றுமருத்துவத்துக்கு சாவுமணி அடிக்கும் தீர்ப்பு அவருக்கு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றதென்றால் அவரது மனப்போக்கு என்ன?

2)Dr.ராம் சொல்வது போல அலோபதி முறையை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் அனைவரும் மாற்றுமருத்துவர்களா? இல்லை பொதுஜனங்களும் உண்டா?

பொது ஜனங்களும் உண்டெனில் அவர்களது காழ்ப்புக்கு என்ன காரணம்?

3)மருந்து நிறுவனங்களிடமும், ஸ்கேனிங் மற்றும் சோதனைக்கூடங்களிடமும் 'அன்பளிப்பு' பெறாத அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியா? மைனாரிட்டியா?

4)அரசு சுகாதார நிலையங்களில் தமது பொறுப்பின் மகத்துவம் உணர்ந்து செயல்படும் அலோபதி மருத்துவர்களின் எண்ணிக்கை மெஜாரிட்டியா? மைனாரிட்டியா?

5)MBBS படிப்புக்கு பல லட்சங்களில் நன்கொடை பெறப்படுவது தனக்குத் தெரியாது என்று எனது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார் மரு.புருனோ. நடுநிலைவாதிகளே! நீங்கள் இதை நம்புகிறீர்களா?

இன்னும் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. பதிவில் ஒரு தொனியிலும் பின்னூட்டங்களில் வேறொரு தொனியிலும் பேசும் மரு.புருனோ அவர்கள் தனது பக்கம் திறந்த மனதுடன் விவாதத்துக்கு தயாராக இருப்பாரேயானால்....பேசலாம்....நான் மாற்று மருத்துவத்துறையைச் சேர்ந்தவனல்லன். எனவே நான் இந்த விவாதத்துக்காக சற்று கடுமையாக உழைக்கவேண்டியிருந்தாலும் கூட..

Unknown said...

அன்புள்ள ராமலிங்கம் ,உங்கள் மேலான முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்

Anonymous said...

POP 15 Yr re-fitment ( PB3 - GP: 6600)order( For qualified persons lacking Teaching experience 5/2 Yrs as on 23.10.2009 & MBBS/Diploma Candidates )

SAP re-fitment ( PB3 - GP: 6600) order ( For persons completed Teaching experience 3 Yrs as on 23.10.2009)



இந்த இரு ஆணைகள் மூலம் GO :354 ல் கிராமப்புற சேவை காலம் , CML சீனியாரிட்டி , மொத்த பணிகாலம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பதும் , நேரடியாக DME ல் பணியில் சேர்ந்தால் மட்டுமே அதிக பலன்களை (MCI ) பெறமுடியும் என்பதும் நிறுபனமாகி உள்ளது.

அதாவது July 2006 ல் பலர் நேரடியாக DME ல் சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்தனர் . 3 1/2 வருடமே மொத்த பணிகாலம் உள்ள இவர்களது (23.10.2009 ல்) சம்பளம் (PB3 . GP : 6600 - i.e Civil Surgeon PAY).இவர்கள் அடுத்த 5 வருடத்தில் PB4 வாங்குவார்கள் (அதாவது 9 1/2 வருட மொத்த பணிகாலத்தில்)....

ஆனால் பல வருடம் DPH / DMS ல் பணி செய்து பின்பு DME க்கு வந்தவர்களின் சம்பளம்(GO:354 படி) பதவி என்ன ??? !!... இனி வரும் காலத்தில் DPHபணி/ Service PG முடித்து DME வருபவர்களின் நிலை / சம்பளம் என்ன??

REPLY ::

அய்யா !

2006 முதல் 2009 வரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 3000 பேர்கள் பணியில் சேர்ந்தனர் ...
இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது எந்த பெரிய பதவி உயர்வு வாய்ப்பும் இருக்காது.

ஏனென்றால் இதே சமயத்தில் சுமார் 1000 பேர்கள் நேரடியாக DME பணியில் சேர்ந்துள்ளனர் ... இவர்கள் ஒரு நாள் கூட கிராமபுரத்தில் பணியாற்ற வில்லை . இவர்களில் பலருக்கு இன்னும் CML எண் கூட தரப்படவில்லை ... ஆனால் GO:354 படி பலர் PB3-GP:6600 , Sr.AP - Civil Surgeon PAY பெற தகுயாகின்றனர். இவர்கள் இனி எல்லா பதவிக்கும் முன்னே சென்று கொண்டே இருப்பார் ( Sr.AP --> Associate --> Professor --> Dean/MS --> DME ).

இனி வரும் காலங்களில் DPH பணி / Service PG முடித்து DME க்கு வரும்போது CML சீனியாரிட்டி , மொத்த பனிகாலம் அதிகம் இருந்தாலும் சீனியர்கள் இவர்களுக்கு பின்னால்தான் எல்லா பதவிகளுக்கும் செல்ல வேண்டும் ...