Monday 2 August, 2010

மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு-- என் கருத்துகள்

பதிவர் ப்ருனோ அவர்கள் எழுதிய

மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு

மற்றும் பதிவர் விந்தைமனிதன் அவர்களின்

மாற்றுமருத்துவம் ஏமாற்றுவேலையா? - Dr.புரூனோவின் பதிவையொட்டி சில சிந்தனைகள்

இரு பதிவுகளிலும் விவாதங்கள் நடைபெற்றது.. மேலும் பின்னூட்டங்களில் என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து சொன்னாலும் நடந்த விவாதங்களை பற்றிய என்னுடைய எண்ணங்கள் இங்கே..

போலி மருத்துவர்களை ஒழிக்கும் முகமாக தமிழகமெங்கும் raid நடத்தப்பட்டது.. அதன்படி முறையாக மருத்துவம் பயிலாமல் மருத்துவம் பார்த்தவர்களும் ,மாற்று மருத்துவம் படித்துவிட்டு தாங்கள் படித்த முறையில் மருத்துவம் பார்க்காமல் அலோபதி முறையில் மருத்துவம் பார்த்தவர்களும் கைது செய்யப்பட்டனர்..இந்த நடவடிக்கையில் முழுக்க மாற்று மருத்துவத்தில் மருத்துவம் பார்க்கும் எந்த மருத்துவரும் பாதிக்கபடவில்லை.

அப்படி இருக்கையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில்தான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது..

நன்றி : தி இந்து : http://www.thehindu.com/news/cities/Chennai/article542577.ece

ஆகவே இங்கு சில கேள்விகள் எழுகின்றன..


  • அலோபதி மருத்துவத்தை பற்றி தெரியாமலேயே அலோபதி மருத்துவத்தை மாற்று மருத்துவர்கள் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகாதா?
  • கிராமங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதனை காரணம் காட்டி BSMS ,BAMS அல்லாத மருத்துவம் பயிலாத RIMP போன்ற போலி மருத்துவர்களும்  சட்டபூர்வமாக அலோபதி மருத்துவம் செய்ய இது வாய்ப்பாகாதா ?
  • இதனால் மக்களுக்கு நன்மையா .. தீமையா?..
மாற்று மருத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை.. ஆனால் தாங்கள் படித்த மருத்துவத்தின்மீது   நம்பிக்கை இல்லாமல் வேறொரு மருத்துவத்தை செய்ய சட்டபூர்வ அங்கீகாரம் கேட்பது ஏன் என்பதுதான் இங்கு கேள்வி..

இதனை பற்றிய கேள்வி எழுப்புகையில் மேற்கண்ட இரண்டு பதிவிலும்  அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது..

ஆனால் இதனால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை..

ஆக்கபூர்வமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன..