Monday, 28 March 2011

உலக தரத்தில் தமிழ் திரைப்படங்கள் - சில காட்சிகள்...

 யாருங்க சொன்னது ..

உலக திரைப்படங்கள் அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் இல்லையென்று..

இங்க பாருங்க..





நம்ம பிரபுதேவா எடுத்தது..



இதையும் பாருங்க ..

அடுத்து பிரபு சாலமன் ..


இந்த பாடல் பார்க்கும்போது எதாவது புரியுதா ..



 நம்ம உலகநாயகன் நமக்காக எடுத்தது...



இப்போ சொல்லுங்க.. தமிழ் திரைப்படங்கள் உலகத்தரத்தில் இருக்கா இல்லையா ...நம்மாளுங்க உலக அளவுக்கு யோசிக்குறாங்க பாருங்க....

Monday, 2 August 2010

மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு-- என் கருத்துகள்

பதிவர் ப்ருனோ அவர்கள் எழுதிய

மாற்று மருத்துவ முறைகளுக்கு சாவு மணி அடிக்கும் உயர் நீதிமன்ற தீர்ப்பு

மற்றும் பதிவர் விந்தைமனிதன் அவர்களின்

மாற்றுமருத்துவம் ஏமாற்றுவேலையா? - Dr.புரூனோவின் பதிவையொட்டி சில சிந்தனைகள்

இரு பதிவுகளிலும் விவாதங்கள் நடைபெற்றது.. மேலும் பின்னூட்டங்களில் என்னுடைய கருத்துக்களை தொடர்ந்து சொன்னாலும் நடந்த விவாதங்களை பற்றிய என்னுடைய எண்ணங்கள் இங்கே..

போலி மருத்துவர்களை ஒழிக்கும் முகமாக தமிழகமெங்கும் raid நடத்தப்பட்டது.. அதன்படி முறையாக மருத்துவம் பயிலாமல் மருத்துவம் பார்த்தவர்களும் ,மாற்று மருத்துவம் படித்துவிட்டு தாங்கள் படித்த முறையில் மருத்துவம் பார்க்காமல் அலோபதி முறையில் மருத்துவம் பார்த்தவர்களும் கைது செய்யப்பட்டனர்..இந்த நடவடிக்கையில் முழுக்க மாற்று மருத்துவத்தில் மருத்துவம் பார்க்கும் எந்த மருத்துவரும் பாதிக்கபடவில்லை.

அப்படி இருக்கையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கில்தான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது..

நன்றி : தி இந்து : http://www.thehindu.com/news/cities/Chennai/article542577.ece

ஆகவே இங்கு சில கேள்விகள் எழுகின்றன..


  • அலோபதி மருத்துவத்தை பற்றி தெரியாமலேயே அலோபதி மருத்துவத்தை மாற்று மருத்துவர்கள் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகாதா?
  • கிராமங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது என்பதனை காரணம் காட்டி BSMS ,BAMS அல்லாத மருத்துவம் பயிலாத RIMP போன்ற போலி மருத்துவர்களும்  சட்டபூர்வமாக அலோபதி மருத்துவம் செய்ய இது வாய்ப்பாகாதா ?
  • இதனால் மக்களுக்கு நன்மையா .. தீமையா?..
மாற்று மருத்துவத்தை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை.. ஆனால் தாங்கள் படித்த மருத்துவத்தின்மீது   நம்பிக்கை இல்லாமல் வேறொரு மருத்துவத்தை செய்ய சட்டபூர்வ அங்கீகாரம் கேட்பது ஏன் என்பதுதான் இங்கு கேள்வி..

இதனை பற்றிய கேள்வி எழுப்புகையில் மேற்கண்ட இரண்டு பதிவிலும்  அலோபதி மருத்துவர்கள் மீதான காழ்புணர்ச்சியின் காரணமாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் இடப்பட்டு உள்ளது..

ஆனால் இதனால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி யாரும் விவாதிக்க தயாராக இல்லை..

ஆக்கபூர்வமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன..

Monday, 14 September 2009

ஹையா.. நானும் பதிவு எழுதிட்டேன்

வலையுலகின் சூப்பர் ஸ்டார் மரு.புருனோ அவர்களின் அழைப்பை ஏற்று ......

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABC s of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag.

1. A – Available/Single? :
சிங்கம் single இல்லை.

2. B – Best friend? :
நட்பை மதிக்கும் யாவரும்

3. C – Cake or Pie?:
கேக் கா திங்க !!!..

4. D – Drink of choice? :
காபி ( அடிப்பது அல்ல)

5. E – Essential item you use every day? : புன்னகை

6. F – Favorite color? : பசுமை தரும்

7. G – Gummy Bears Or Worms?: உலகப்படமா இருக்குமோ ?? ஙே...

8. H – Hometown? : அறந்தாங்கி

9. I - Internetல் அதிகம் பார்ப்பது - வலைப்பதிவுகள் தமிழில் ..

10. J – January or February? : மாதங்களில் மார்கழி

11. K – Kids & their names?: பேர் சொல்லும் பிள்ளை ஒன்று...

12. L – Life is incomplete without?: நல்லதொரு குடும்பம்

13. M – Marriage date ? : marriage ? or date?

14. N – Number of siblings ? : ....

15. O – Oranges or Apples ? : ஆரஞ்சுதான்.. an apple a day keep doctor away
இல்லையா..

16. P – Phobias / Fears ? :வலைப்பதிவர்களின் அரசியல்

17. Q – Quote for today ? : life is short..live it

18. R – Reason to smile? : புன்னகைக்க காரணம் தேவையா என்ன ?

19. S – Season ? : மழைக்காலம்

20. T – Tag 4 People?

* Mathi... http://www.himathi.blogspot.com

* siva ராஜா http://www.thamizhanalama.blogspot.com/

* அவிய்ங்க ராசா http://aveenga.blogspot.com

* தமிழ்த்துளி தேவன் மாயம் http://abidheva.blogspot.com/

21. U – Unknown fact about me ? :

known fact இன்னும் யாருக்கும் தெரியாது.. இதுல unknown fact வேறயா

22. V – Vegetable you don't like ? : கருணை பிடிக்கும்.. அதன் கிழங்கு பிடிக்காது..

23. W – Worst habit ? : தூக்கம்

24. X – X-rays you've had ? : ம்ஹும்..

25. Y – Your favorite food ? : அம்மா சமைக்கும் அத்தனையும் ...

26. Z - zen - மாருதியா. ..ரீமாவா..

அப்பாடா.. முடிச்சாச்சு..
ஹே.. நானும் பதிவு எழுதிட்டேன்..பதிவு எழுதிட்டேன்.. நானும் இனிமே வலைப்பதிவர்தான் ..

வலையுலகின் அரிச்சுவடிகூட தெரியாத என்னையும் பதிவு எழுத தூண்டிய மரு. புருனோ அவர்களுக்கு நன்றி..

Wednesday, 24 June 2009

பதிவுலகிற்கு வணக்கம்

பதிவுலகம் என்னும் இந்த அலைகடலில் சிறு துளியாக என்னை கரைத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான சில விஷயங்களை விவாதிக்க நான் இடும் முதல் இடுகை இது. ...

ஒரு மருத்துவராகவும் ,எங்கள் துறையில் பதிவுலக முன்னோடியாக விளங்கும் மரு. ப்ருனோ அவர்களின் பாதிப்பில் மருத்துவ துறையின்பால் மக்களுக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்கள் , ஆதங்கங்கள் பற்றி என்னால் முடிந்த விளக்கங்கள் தரும் முயற்சி இது...

விவாதங்கள் இனி இங்கு தொடரும்..